ட்ரம்பை கொலை செய்ய ஈரான் ஒருபோதும் முயற்சிக்காது – ஜனாதிபதி பெசெஷ்கியான் தெரிவிப்பு

ட்ரம்பை கொலை செய்ய ஈரான் அரசு சதி செய்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய ஈரான் ஒருபோதும் முயற்சிக்காது என ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றிய விடயம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

அமெரிக்காவுடனான போர் நீடித்தாலும் தனது நாடு தலைவணங்காது. தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காது.

போரின் தொடக்கத்திலிருந்து ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பொதுவெளியில் காணப்படாத நிலையில், அவரது உடல்நிலை தொடர்பாக அண்மைக் காலங்களில் பல்வேறு ஊகங்கள் வெளியாகியிருந்தன.

அவரது உடல்நிலை அல்லது உடல் தோற்றத்தில் குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் எதையும் நான் காணவில்லை. தங்களது கடைசி நேரடி சந்திப்பு சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்றது” என கூறியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles