பென்டகன் தகவல் மையத்துள் நுழைந்து 30 லட்சம் அமெரிக்க இராணுவத்தினர் விவரங்கள் திருட்டு

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் (Pentagon) தலைமையகக் கணினி அமைப்பான பாதுகாப்பு மனிதவள தகவல் மையத்தில் (DMDC) அடையாளம் தெரியாத நபர்கள் அத்துமீறி நுழைந்து, 30 லட்சத்திற்கும் அதிகமானோரின் முக்கிய தனிநபர் விவரங்களைத் திருடியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பாதுகாப்பு மீறலில் உயிருடன் உள்ள சுமார் 27.6 லட்சம் நபர்கள் மற்றும் மறைந்த 2.94 லட்சம் நபர்களின் ஆவணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தரவுத்தளத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாட்டைப் பயன்படுத்தி, கடந்த ஒக்ரோபர் 2025 முதல் ஜூலை 2026 வரை பல மாதங்களாக இந்த ஊடுருவல் கண்டறியப்படாமல் தொடர்ந்து நடந்துள்ளதாக பென்டகன் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

இந்த சைபர் தாக்குதலின் மூலம் இராணுவ வீரர்கள் மற்றும் பணியாளர்களின் சமூகப் பாதுகாப்பு எண்கள் (Social Security Numbers), பெயர்கள், பிறந்த திகதிகள், தற்போதைய முகவரிகள், தொலைபேசி எண்கள், பாலினம் மற்றும் அவர்களின் இராணுவப் பணியிட பொறுப்புகள் உள்ளிட்ட மிக முக்கியமான விவரங்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தகவல்கள் அனைத்தும் என்க்ரிப்ட் செய்யப்படாத (Unencrypted) எளிய வடிவில் இருந்ததால், ஊடுருவல்காரர்கள் எளிதாகச் சேகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புத் துளை கண்டறியப்பட்ட உடனடியாக அது அடைக்கப்பட்டு, தற்போது அமைப்புகள் முழுமையாகப் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது வரை திருடப்பட்ட இந்தத் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்கான அல்லது விற்பனை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று பென்டகன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதிக்கப்பட்ட நபர்களுக்குத் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.

மேலும், அவர்களுக்கு ஏற்படக்கூடிய நிதி மற்றும் அடையாளத் திருட்டு அபாயங்களில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு, இலவச கிரெடிட் கண்காணிப்பு மற்றும் அடையாளப் பாதுகாப்புச் சேவைகளை வழங்க அமெரிக்க பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles