4000ஐ கடந்த பலி எண்ணிக்கை ; கொங்கோவில் வேகமெடுக்கும் எபோலா

கொங்கோவில், பரவி வரும் எபோலா பாதிப்புகளால் இதுவரை 4,000 இற்கும் அதிகமானோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆபிரிக்க நாடான காங்கோவில், எபோலா தொற்றின் பரவல் அதிகரித்து வருகின்றது.

கடந்த மே 15 அன்று பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட புண்டிபுகியோ வைரஸ் தொடர்புடைய எபோலா பாதிப்புகளுக்கு இதுவரை எந்தவொரு தடுப்பூசி மற்றும் சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரங்கள் படி, வரலாற்றிலேயே மிக வேகமாகப் பரவும் எபோலா பாதிப்பாக இது மாறியுள்ள நிலையில், உறுதிப்படுத்தப்பட்ட 8,300 நோய்த் தொற்றுச் சம்பவங்களில் 4,018 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வைரஸ் புதிய சுகாதார மண்டலங்களுக்கும் வேகமாகப் பரவி வருவதால், ஏற்கெனவே குறைவாக உள்ள மருத்துவ வளங்களுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, உள்நாட்டு மோதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காங்கோவில் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகுந்த சவாலாக உள்ளது.

இதனால், பாதிக்கப்பட்டோர் உடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவதில் சிக்கல் எழுந்துள்ளது. காங்கோவின் இடூரி மாகாணத்தில் மட்டும் அந்நாட்டில் கண்டறியப்பட்ட 90 சதவிகித எபோலா பாதிப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles