கனடா குறித்த எலோன் மஸ்கின் கருத்தால் எழுந்துள்ள எதிர்ப்பு

கனடாவின் கியூபெக், அல்பெர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் ஆகிய மாகாணங்கள் கனடாவிலிருந்து பிரிந்து தனிநாடாக மாற வேண்டும் என உலகின் முன்னணிப் பணக்காரரான எலோன் மஸ்க் தெரிவித்த கருத்துக்கு சஸ்காட்செவன் மாகாண முதலமைச்சர் ஸ்காட் மோ பகிரங்கமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

கியூபெக் மாகாணத்தின் புதிய முதல்வராக தேர்வாகியுள்ள போல் சென்-பியர் பிளமண்டன், கியூபெக் தனிநாடாகும் தனது கனவு “ஒரு நாள் நிச்சயம் நனவாகும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு எக்ஸ் (X) தளத்தில் பதிலளித்த ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மற்றும் எக்ஸ் தளத்தின் அதிபரான எலோன் மஸ்க், “நல்லது. கியூபெக் பிரிய வேண்டும். அதுவே அவர்களுக்கு நல்லது.

அல்பெர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் மாகாணங்களும் பிரிய வேண்டும்” எனப் எலோன் மஸ்கின் இந்தப் பதிவை மேற்கோளிட்டு சமூக வலைத்தளத்தில் பதிலளித்த சஸ்காட்செவன் முதலமைச்சர் ஸ்காட் மோ, “இல்லை” (No) என ஒரே வார்த்தையில் மஸ்கின் யோசனையை நேரடியாக நிராகரித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்காட் மோ ஏற்கனவே சஸ்காட்செவன் மாகாணம் கனடாவிலிருந்து பிரிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். எனினும், அல்பெர்ட்டா மாகாண முதலமைச்சர் டேனியல் ஸ்மித் பிரிவினை தொடர்பான பொதுவாக்கெடுப்பை நடத்துவதற்கான உரிமையை அவர் ஆதரித்திருந்தார்.

மேலும், சஸ்காட்செவன் மாகாணத்திலும் பொதுவாக்கெடுப்பு தொடர்பான சட்டங்கள் உள்ளதாகவும், பொதுமக்கள் தரப்பிலிருந்து சட்டபூர்வமாக அத்தகைய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் அரசாங்கம் சட்டத்தைப் பின்பற்றி நடக்கும் என்றும் அவர் கடந்த மே மாதம் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles