நாடாளுமன்ற தேர்தலை ஒத்திவைத்த பலஸ்தீன ஜனாதிபதி

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவிருந்த பலஸ்தீனத் தேர்தலை ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மீண்டும் ஒத்திவைத்துள்ளார்.

பலஸ்தீன சட்டமன்றக் குழுவிற்கான வாக்குப்பதிவை மேலும் ஒரு வருடத்திற்குத் ஒத்தி வைக்கும் புதிய ஆணையை அவர் பிறப்பித்துள்ளார்.

அடுத்த மாதம் நடைபெறவிருந்த சட்டமன்றத் தேர்தல், ஜனாதிபதி தேர்தலுடன் இணைக்கப்பட்டு 2027 செப்டம்பர் 11 அன்று நடத்தப்படும் என்று இந்த ஆணையை மேற்கோள் காட்டி பலஸ்தீனத்தின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான Wafa தெரிவித்துள்ளது.

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் முதலில் நவம்பர் 28 அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஜனாதிபதி தேர்தல் 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

தேர்தலை ஒத்திவைப்பது குறித்து விவாதிக்க பாலஸ்தீன உயர் அதிகாரிகளின் குழு சனிக்கிழமை காலை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அப்பாஸ் தலைமை தாங்கும் ‘பலஸ்தீன விடுதலை அமைப்பின்’ (PLO) செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம், மேற்குக் கரை மற்றும் காசா பகுதியில் தற்போதுள்ள சூழ்நிலைகள் தேர்தலை நடத்துவதற்குச் சாதகமாக இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், காசாவிற்குள் தேர்தல் பொருட்களையோ அல்லது சர்வதேச பார்வையாளர்களையோ நுழைய இஸ்ரேல் அனுமதிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இராணுவத் தாக்குதல்கள், குடியிருப்புகள் விரிவாக்கம் மற்றும் குடியேறிகளின் வன்முறைகள் காரணமாக நவம்பர் மாதத்தில் நியாயமான முறையில் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றதாக மாறியுள்ளதாக Wafa செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles