அமெரிக்காவில் இந்து கோயில் ஒன்றில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இளைஞர் கைது

அமெரிக்காவின் சிக்காகோ பகுதியில் உள்ள இந்து வழிபாட்டுத் தலமொன்றைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தத் திட்டமிட்டார் எனக் கூறப்படும் 19 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் அங்கு இடம்பெறவிருந்ததாகக் கூறப்படும் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட இளைஞர், இல்லினாய்ஸ் மாநிலத்தின் பலட்டை பகுதியைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரோஸ் பபோராகிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் உணவகம் ஒன்றில் காசாளராகப் பணியாற்றி வந்ததார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார் எனக் கூறப்படும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னதாக, தனது துப்பாக்கிச் சூடு திட்டம் தொடர்பான எட்டு பக்க ஆவணமொன்றையும் தந்திரோபாயப் போர் உபகரணங்களின் படங்களையும் சக ஊழியர் ஒருவருக்கு அவர் அனுப்பியுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இளைஞரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது, வரிசை எண் இல்லாத AR ரகத் துப்பாக்கி, வெடிமருந்துகள், தோட்டாக்கள் நிரப்பப்பட்ட மகசின்கள் மற்றும் எரிவாயுக் கலன் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று புதன்கிழமை (14) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பபோராகிஸுக்கு பிணை மறுக்கப்பட்டதுடன், விசாரணைக்கு முந்தைய பொலிஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் ஒக்ரோபர் 30ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles