துருக்கியில் 4,700 ஆண்டுகள் பழமையான கப்பல் சிதைவு கண்டுபிடிப்பு

துருக்கியின் கடற்கரைக்கு அப்பால் உலகின் மிகப் பழமையான கப்பல் சிதைவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இவை சுமார் 4,400 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை எனக் குறிப்பிடப்படுகிறது.

துருக்கியின் கெகோவா தீவின் கடற்கரைக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆரம்ப வெண்கலக் காலத்தைச் சேர்ந்ததும், சுமார் 10 மீட்டர் நீளமுடையதுமான இந்தக் கப்பல், மத்திய தரைக்கடல் முழுவதும் பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டது.

எகிப்தில் கிஸாவின் புகழ்பெற்ற பிரமிடுகள் கட்டப்பட்ட தொடக்கக்கால வெண்கலக் காலத்தைச் (Early Bronze Age) சேர்ந்த இந்த வணிகக் கப்பல், மத்தியதரைக் கடலில் சுமார் 30 மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. துருக்கியின் அக்டெனிஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹாகன் ஓனிஸ் (Hakan Öniz) தலைமையிலான தொல்பொருள் ஆய்வுக் குழுவினர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கக் கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர்.

கப்பலின் மரக் கட்டமைப்புகள் முழுமையாக அழிந்துவிட்ட போதிலும், கடலின் அடியில் இருந்த 30க்கும் மேற்பட்ட பழங்கால மட்பாண்டங்கள் (Amphorae) மற்றும் 3 பெரிய கல் நங்கூரங்கள் சேதமடையாமல் மீட்கப்பட்டுள்ளன. இந்தக் கப்பல் லெவண்டைன் கடற்கரைப் பகுதியிலிருந்து ட்ராய் அல்லது கிரீட் தீவை நோக்கி ஒலிவ் எண்ணெய் அல்லது திராட்சை மது போன்ற பொருட்களைச் சுமந்து சென்றபோது விபத்துக்குள்ளாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

மீட்கப்பட்ட மட்பாண்டங்களில் உள்ள வடிவமைப்பு மற்றும் களிமண் தன்மைகளைச் சோதித்ததில், அவை ஜோர்டான் பள்ளத்தாக்குப் பகுதியில் தயாரிக்கப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. “கடலின் அடியில் உறைந்துபோன ஒரு காலப் பெட்டகத்தைக் கண்டறிந்துள்ளோம்; 5,000 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பொருட்களைத் தொடும் முதல் மனிதர்கள் நாங்கள் தான்” எனப் பேராசிரியர் ஹாகன் ஓனிஸ் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த அரிய கண்டுபிடிப்பு தொடர்பாகத் துருக்கியின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மெஹ்மத் நூரி எர்சோய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பழங்கால வணிகப் பாதைகள் மற்றும் மத்தியதரைக் கடல் நாகரிகங்களின் வர்த்தகத் தொடர்புகளைப் புரிந்துகொள்ள இந்தச் சிதைவுகள் பெரும் சான்றாக அமையும் எனப் தொல்பொருள் நிபுணர்கள் கருதுகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles