யேமன் ஜனாதிபதி மாளிகை மீது ஹவுதிகள் ஏவுகணைத் தாக்குதல்: 5 பேர் பலி!

யேமனின் தெற்குப் பகுதியில் ஏடன் நகரில் உள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தைக் குறிவைத்து, நேற்று வியாழக்கிழமை ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த ஏவுகணைத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜனாதிபதி மாளிகை வளாகத்தின் மீது ஹூதிகள் ஐந்து ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மொஅம்மர் அல்-எரியானி தெரிவித்தார். எனினும், அங்கு தங்கியிருந்த யேமன் பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாகத் தப்பினர்.

ஏடனில் உள்ள சவூதி இராணுவ நடவடிக்கைகளின் தலைமையகத்தைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி அமைப்பின் இராணுவப் பேச்சாளர் யஹ்யா சாரீ தெரிவித்தார்.

“சவூதி இராணுவக் குவிப்புகள் எங்கிருந்தாலும் அவற்றைக் குறிவைப்பது” தங்களின் கொள்கையின் ஒரு பகுதி என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகச் சம்பவத்தைப் பார்த்த மூன்று பேர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles