கொலம்பியாவின் தென்மேற்குப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 07 பேயமர் காடைந்துள்ளனர்.
நாரினோ மாகாணத்தில் உள்ள சாண்டா பார்பரா டி இஸ்குவாண்டே நகராட்சியின் சேம்பெரோ பகுதியில் உள்ள சுரங்கமே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.
தற்போது தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக நாரினோ ஆளுநர் லூயிஸ் அல்போன்சோ எஸ்கோபார் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான மற்றும் சிறு அளவிலான சுரங்கத் தொழிலில் ஈடுபடுபவர்களின் பணிச் சூழலையும் பாதுகாப்புத் தரங்களையும் மேம்படுத்த, அவர்களை முறைப்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்துமாறும் அவர் மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இதேவேளை இதற்கு முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில், நாரினோ மாகாணத்தில் உள்ள போலிகார்பா நகரில் நிகழ்ந்த இதே போன்ற சுரங்க விபத்தில் 13 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
