தசரா விழாவில் கலந்துகொண்டு இராவணன் உருவ பொம்மையை எரித்தார் பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் நேற்று (ஒக்டோபர் 20) நடைபெற்ற விஜயதசமி விழாவில் கலந்துகொண்டு, இராவணனின் உருவ பொம்மையை எரிக்கும் பாரம்பரிய நிகழ்வில் பங்கேற்றார்.

டெல்லியின் ஐ.பி. எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள டெல்லி அபிவிருத்தி ஆணையத்தின் (DDA) உத்சவ் மைதானத்தில் இந்த விழா நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய பிரதமர் மோடி, பாகுபாடுகள் இல்லாத ஆட்சிமுறையே ‘ராம ராஜ்ஜியம்’ எனக் குறிப்பிட்டார். நீதியும் அனைவருக்கும் சமமான வாய்ப்புக
ளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதிகாரத்தின் நோக்கம் ஆட்சி செய்வது மட்டுமல்ல; மக்களின் நலனை உறுதிப்படுத்துவதுமாகும் எனத் தெரிவித்த அவர், ஏழைகள் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய மக்களின் நலனுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

நன்மை தீமையை வெல்வதைக் குறிக்கும் தசரா பண்டிகையின்போது, இராவணனின் உருவப் பொம்மையை எரிக்கும் பாரம்பரிய நிகழ்வு இந்தியாவின் பல பகுதிகளில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles