இலங்கை – இந்திய விமானப்படை தளபதிகள் இடையே சந்திப்பு

Colombo (News 1st) நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்திய விமானப்படை தளபதி Air Chief Marshal V.R.சௌத்ரி மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இராணுவப் படையின் தலைமையத்தில் இன்று(02) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்திய விமானப்படை தளபதி உள்ளிட்டவர்களை விமானப் படையின் கொழும்பு முகாமின் கட்டளையதிகாரி வரவேற்றார்.

விமானப்படையின் வர்ண பிரிவு அணிவகுப்பு மரியாதையும் இதன்போது இடம்பெற்றது.

இரு தரப்பு பயிற்சி நடவடிக்கைகள், பேச்சுவார்த்தைகள், பிராந்திய விமானப் படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேம்படுத்துதல் ஆகியன தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது நினைவுச்சின்னங்களும் பரிமாறப்பட்டன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles