Sangathy
News

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் ஈரான் வௌிவிவகார அமைச்சர் கலந்துரையாடல்

 Colombo (News 1st) பிரதமர் தினேஷ் குணவர்தன, ஈரான் வௌிவிவகார அமைச்சர் ஹூசைன் அமீர்-அப்துல்லாஹியான் (Hossein Amir-Abdollahian) ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் அலரி மாளிகையில்  இன்று (20) நடைபெற்றது.

மசகு எண்ணெய்க்காக இலங்கை ஈரானுக்கு செலுத்த வேண்டிய 250 மில்லியன் டொலருக்கு பதிலாக இலங்கையிலிருந்து தேயிலையை ஏற்றுமதி செய்ய இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

ஈரான் வௌிவிவகார அமைச்சர் கலாநிதி ஹூசைன் அமீர்-அப்துல்லாஹியான்,  அரபு நாடுகளுக்குச் சென்று ஹமாஸ் அமைப்பின் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்த பின்னர் 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை நேற்றிரவு வந்தடைந்தார்.

ஈரான் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினர், நேற்று இரவு 10.45 அளவில் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலைய கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.

ஈரான் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினர் 21ஆம் திகதி வரை நாட்டில் தங்கவுள்ளனர்.

ஈரானிய வெளிவிவகார அமைச்சரின் இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த உதவும் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Pakistan’s president by passes EC and declares poll date in provinces

Lincoln

Second monkeypox case detected; both from Dubai

Lincoln

South Korea: Seoul mayor takes own life after sexual harassment allegations

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy