Sangathy
News

மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையை சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு கையளிக்க திட்டம்?

Colombo (News 1st) மட்டக்களப்பு – மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலைக்கு நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் இன்று விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இந்த வைத்தியசாலையை சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கும் புனர்வாழ்வு பணியகத்திற்கும் கையளிப்பது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலைக்கு நீதி அமைச்சருடன் சிறைச்சாலைகள் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன, இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்டோரும் இன்று சென்றிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 98 ஏக்கர் நிலப்பரப்பில் வவுணதீவு வாவியின் நடுவே மாந்தீவு அமைந்துள்ளது.

இங்கு  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குரிய தொழுநோய் பிரிவும் நோயாளர்கள் விடுதியும் உள்ளன.

நீதி அமைச்சர்  கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் வைத்தியசாலை, நோயாளர் விடுதி, பழமைவாய்ந்த கட்டடங்கள், மதஸ்தலங்கள் உள்ளிட்டவற்றை விமானப்படையினரின் உதவியுடன் பார்வையிட்டனர்.

Related posts

Asian Youth medallist Nirmali among contenders vying for top honours

Lincoln

சமஷ்டி கட்டமைப்பில் அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் – M.A.சுமந்திரன்

Lincoln

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 66 பேர் பணி நீக்கம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy