Friday, February 6, 2026
Homeபடகு விபத்தில் 90 பேர் பலி..!

படகு விபத்தில் 90 பேர் பலி..!

மொசாம்பிக் கடற்பரப்பில் படகொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 90 பேர் உயிரிழந்தனர்.

விபத்து ஏற்படும் போது படகில் 130 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நம்புலா மாநிலத்தில் உள்ள தீவு ஒன்றுக்கு அருகில் மீன்பிடிக் கப்பல் ஒன்றே இவ்வாறு மூழ்கியதாக கூறப்படுகிறது.

அதிக ஆட்களை அழைத்துச் சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular