Sangathy
Sports

ஐ.பி.எல். 2024 : இன்று மும்பை-பெங்களூரு அணிகளிடையான மோதல்..!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் 5 முறை சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

மும்பை அணி முதல் 3 ஆட்டங்களில் (குஜராத், ஐதராபாத், ராஜஸ்தானுக்கு எதிராக) வரிசையாக தோற்றது. எனினும் கடந்த ஆட்டத்தில் டில்லி கெப்பிட்டல்ஸை தோற்கடித்து வெற்றிக்கணக்கை தொடங்கியது.

இதில் தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன், ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, டிம் டேவிட், ஒரே ஓவரில் 32 ரன் விளாசிய ரொமாரியோ ஷெப்பர்டு ஆகியோரின் அதிரடியால் மும்பை அணி 234 ஓட்டங்கள் குவித்ததோடு, டில்லியை 205 ஓட்டங்களில் கட்டுப்படுத்தியது.

காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள 20 ஓவர் கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தனது முதல் ஆட்டத்தில் டக்-அவுட் ஆனார். ஆனால் இந்திய ஆட்டத்தில் அவர் பிரகாசிப்பார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. சாதகமான உள்ளூர் சூழலை பயன்படுத்தி தொடர்ந்து 2ஆவது வெற்றியை வசப்படுத்தும் முனைப்புடன் மும்பை அணியினர் ஆயத்தமாகிறார்கள்.

பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ரோயல் செலஞ்சர்ஸ் அணி விளையாடியுள்ள 5 ஆட்டங்களில் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. சென்னை, கல்கத்தா, லக்னோ, ராஜஸ்தான் ஆகிய அணிகளிடம்வீழ்ந்தது. செம்மஞ்சள் நிற தொப்பியை தக்கவைத்துள்ள விராட் கோலி (ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 316 ஓட்டங்கள்) தவிர மற்ற துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் பெங்களூரு அணியில் தடுமாறுகிறார்கள்.

குறிப்பாக மேக்ஸ்வெல் (5 ஆட்டத்தில் 32 ஓட்டங்கள்), கேமரூன் கிரீன் (68 ஓட்டங்கள்), அணித்தலைவர் பிளிஸ்சிஸ் (109 ஓட்டங்கள்), ரஜத் படிதார் (50 ஓட்டங்கள்) ஆகியோரின் ஆட்டம் அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை 17 வீரர்களை பயன்படுத்தி பார்த்தும் இன்னும் களம் காணும் சரியான லெவன் அணி அமையவில்லை. கோலியுடன் இதர துடுப்பாட்ட வீரர்களும் நிலைத்து நின்று மட்டையை சுழற்றினால் தான் மும்பையை அடக்க முடியும்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14இல் பெங்களூருவும், 18இல் மும்பையும் வெற்றி பெற்றுள்ளன

Related posts

Suryakumar ton sets up India’s series victory

Lincoln

Shanaka stars as Sri Lanka level series

Lincoln

Salamuthu, Tharushi excel with impressive 400 metre feats

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy