இஸ்ரேலியத் தாக்குதல் : ஹமாஸ் தலைவரின் மகன்கள் உயிரிழப்பு..!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 33,482 பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததுடன் 76,049 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், காஸாவிலுள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹானியேவின் மகன்கள் ஹாசேம், ஆமீர் மற்றும் முகமது ஆகிய 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹானியே உறுதி செய்துள்ளார். இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பாலஸ்தீன தலைவர்களின் குடும்பத்தினரை இஸ்ரேல் இராணுவம் குறிவைத்து தாக்கினாலும் அவர்கள் ஒருபோதும் பின்வாங்கமாட்டார்கள் என்றும், இந்த படுகொலைகளால் போர் நிறுத்த பேச்சுவார்த்தையின்போது ஹமாஸ் அமைப்பின் கோரிக்கைகளில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles