Friday, January 10, 2025
Homeவிஜயகாந்த், அஜித் வரிசையில் விஜய் சேதுபதி : தமிழ் சினிமாவின் சென்டிமென்ட்டை உடைத்தெறிந்த ஹீரோக்கள்..!

விஜயகாந்த், அஜித் வரிசையில் விஜய் சேதுபதி : தமிழ் சினிமாவின் சென்டிமென்ட்டை உடைத்தெறிந்த ஹீரோக்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் தான் விஜய் சேதுபதி. இவரை நாம் ஹீரோ என்ற ஒரு வட்டத்திற்குள் அடக்கிவிடமுடியாது. ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்து விதமான ரோல்களிலும் நடித்து அசத்தி வருகின்றார் விஜய் சேதுபதி. பல போராட்டங்களுக்கு பிறகு 2010 ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் ஹீரோவானார் விஜய் சேதுபதி.

அதைத்தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். வித்யாசமான படங்களின் மூலம் வெற்றிகளை பதிவு செய்த விஜய் சேதுபதி இடையில் வில்லனாகவும் நடிக்க துவங்கினார். ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் வில்லன் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர், கமலின் விக்ரம், ஷாருக்கானின் ஜவான் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து மிரட்டினார்.

தற்போது ஹீரோவாகவே இனி நடிக்கலாம் என முடிவெடுத்துள்ள விஜய் சேதுபதி மஹாராஜா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். குரங்கு பொம்மை என்ற தரமான படத்தை கொடுத்த நித்திலன் இப்படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான மஹாராஜா நேற்று திரையில் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள மஹாராஜா திரைப்படம் வசூலிலும் அடித்து நொறுக்கி வருகின்றது. நேற்று மட்டும் மஹாராஜா திரைப்படம் ஒரே நாளில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட எட்டு கோடி வரை வசூலித்துள்ளது. மேலும் போக போக இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் மஹாராஜா திரைப்படத்தின் மூலம் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் உலா வரும் சென்டிமென்டை உடைத்தெறிந்துள்ளார். பொதுவாக ஹீரோக்களின் ஐம்பதாவது மற்றும் நூறாவது திரைப்படம் ஓடாது என்ற சென்டிமென்ட் தமிழ் சினிமாவில் உலா வந்துகொண்டு இருந்தது. அந்த சமயத்தில் தான் விஜயகாந்த் தன் நூறாவது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுத்து அந்த சென்டிமென்டை உடைத்தார்.

அதன் பிறகு பல வருடங்கள் கழித்து அஜித் தன் ஐம்பதாவது திரைப்படமான மங்காத்தா படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். இதன் மூலம் அஜித்தும் இந்த சென்டிமென்டை உடைத்தார். இந்நிலையில் விஜயகாந்த் மற்றும் அஜித்தை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியும் அந்த சென்டிமென்டை மஹாராஜா படத்தின் மூலம் உடைத்தெறிந்துள்ளார்.

விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான மஹாராஜா மாபெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. கண்டிப்பாக இப்படம் மிகப்பெரிய வசூலை பெற்று வெற்றிபெறும் என்று உறுதியாக கூறப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments