Monday, September 23, 2024
Homeதோல்வியின் வலி எப்படி இருக்கும் தெரியுமா..? : பாரிஸ் ஒலிம்பிக்ஸில் கதறி அழுத வீராங்கனை..!

தோல்வியின் வலி எப்படி இருக்கும் தெரியுமா..? : பாரிஸ் ஒலிம்பிக்ஸில் கதறி அழுத வீராங்கனை..!

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நேற்று முன் தினம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடி வருகின்றனர். விளையாட்டு என்பதையும் தாண்டி தங்களது நாடுகளின் கவுரவம் சார்ந்த மிகப்பெரிய பொறுப்பு தங்களை நம்பி கொடுக்கப்பட்டுள்ளதாக வீரர்கள் கருதுவதால் வெற்றியும் தோல்வியும் அவர்களை உணர்ச்சிவசப் பட வைத்துவிடுகிறது.

அந்த வகையில் நேற்று நடந்த பெண்களுக்கான ஜூடோ போட்டியில் தோல்வியடைந்த ஜப்பான் வீராங்கனை யுதா அபே [Uta Abe] மனமுடைந்து அழுத்த காட்சிகள் காண்போரைக் கலங்கச் செய்வதாக உள்ளது. நேற்று 52 கிலோவுக்கு உட்பட பெண்கள் ஜூடோ போட்டியில் உலகின் முதன்மை ஜுடோ வீராங்கனையாக விளங்கும் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை தியோரா கெல்டியோரோவா [Diyora Keldiyorova] உடன் ஜப்பானின் யுதா அபே விளையாடினார்.

4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற யுதா அபே கடுமையான போட்டியை வெளிப்படுத்தியும் இரண்டாவது சுற்றில் தோல்வியைத் தழுவினார். இதனால் ஜூடோ மேட்டை விட்டு கதறி அழுதபடி சென்ற அபேவை அவரது பயிற்சியாளராலும் தேற்ற முடியவில்லை. 3 வருடங்களுக்கு முன் டோக்கியோ ஒலிம்பிக்சில் அபே தங்க மெடல் வாங்கி ஜப்பானுக்குப் பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments