Saturday, September 21, 2024
Homeஇந்தியாவின் EOS_08 செய்மதி விண்வெளியில்

இந்தியாவின் EOS_08 செய்மதி விண்வெளியில்

பூமியின் காலநிலை பற்றிய கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை கொண்ட EOS_08 எனும் செயற்கைக்கோளை வடிவமைத்துள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையம் அதனை இன்று (16.08.20024) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

https://www.youtube.com/live/gfmC4Z9Ms9U?si=kJE499aYrzQzfopk

புவிசார்ந்த பல்வேறு கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ள இச் செயற்கைக்கோள் ஒரு வருட காலம் புவியின் சுற்றுவட்டத்தில் பயணித்து விபரங்களை சேகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இது சிறியரக SSLV_D3 ராக்கெட் மூலம் இன்று இந்திய நேரம் காலை 9.17 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 13 வது நிமிடத்தில் 475 கிலோமீட்டர் உயரத்தை அடைந்து அங்கு நிலைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments