Saturday, September 21, 2024
Home18.08.2024 - இன்றைய இராசி பலன்

18.08.2024 – இன்றைய இராசி பலன்

குரோதி வருடம் ஆவணி மாதம் இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை. ஆங்கில வருடம் 18.08.2024

இன்றைய இராசி பலன்

 

மேஷராசி

பல துறைகளிலும் சாதிக்கும் நாள். பிள்ளைகளின் உதவி கிடைக்கும், பொருளாதார பலம் கூடும், தெய்வத் தலங்களுக்கு செல்லும் வாய்ப்புக் கிடைக்கும். எதிரிகள் சமாதானமாவார்கள்.

அதிஸ்ட எண் – 1

 

ரிஷபராசி

சந்திர அனுக்கிரகத்தால் தொலை தூரப் பயணம் ஏற்படலாம். உடல் நலனில் அக்கறை கொள்வது நல்லது. மேலதிகாரிகளால் தொல்லை அடைந்தவர்களுக்கு நல்ல மாற்றம் கிடைக்கும். சொத்து சுகங்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.

அதிஸ்ட எண் – 2

 

மிதுனராசி

புதன் சாதகமாக இருப்பதால் பெரும் புகழ் கிடைக்கும். வருமானம்  பெருகும் நாளாகும். முயற்சி பெரிதானால் வெற்றி பெரிதாகும். யாருடனும் கருத்து வேறுபாடு கொள்ளாமல் இருப்பது நலம் பயக்கும்.

அதிஸ்ட எண் – 5

 

கடகராசி

நிறைந்த நன்மைகள் பெருகும் நாள். வருமானம் பெருகும் நாள். பயணம் வெற்றியடையும். பேச்சில் கம்பீரம் காணப்படும். கல்வியில் ஆர்வம் ஏற்படும்.

அதிஸ்ட எண் – 9

 

சிம்மராசி

நற்புகழ் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் உடல் நலனில் அக்கறை கொள்வது நல்லது. உறவுகளிடையே வீண் முரண்பாடுகள் ஏற்படலாம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனமெடுக்கவும். கடன் தொல்லை ஏற்படலாம்.

அதிஸ்ட எண் – 6

 

கன்னிராசி

இறைவனின் அனுக்கிரகம் பூரணமாக கிடைக்கும் நாள். குலதெய்வ வழிபாடு நன்மை பயக்கும். வெளியூர் பயணம் கைகூடும். நிறைந்த நன்மைகள் கிடைக்கும் நாள்.

அதிஸ்ட எண் – 5

 

துலாம்ராசி

லாபம் கிடைக்கும் நாள். பெரும் வெற்றி பெறக்கூடிய நாள். கல்வியில் முன்னேற்றம் காணும் நாள். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். உறவுகள் நெருக்கமாக இருப்பார்கள்

அதிஸ்ட எண் – 7

 

விருச்சிகராசி

எதிர்பார்க்கும் தொடர்பு கிடைக்கும். பிரிந்தவர் ஒன்று சேர்வர். வேலைவாய்ப்பு முயற்சியில் ஈடுபடுவீர்கள். வெளிநாட்டு பயணம் கைகூடும். பெண்களுக்கு மகிழ்ச்சி கூடும் நாள்

அதிஸ்ட எண் – 4

 

தனுசுராசி

யோகம் கூடும் நாள். பணவரவு கூடும். குறுக்கு வழியில் கிடைக்கும் பணம் பற்றி எச்சரிக்கையாக இருக்கவும். உறவுகள் வீடு வரும் நாள். வெளியூர் பயணம் அமையலாம்.

அதிஸ்ட எண் – 3

 

மகரராசி

குரு அருள் கூடும் நாள். தன லாபம் கூடும். கூட்டு வியாபாரத்தில் கூடிய கவனம் தேவை. கல்வியில் கவனம் தேவை. இளம் தம்பதிகள் விட்டுக் கொடுத்து செல்வது நலம்.

அதிஸ்ட எண் – 6

 

கும்பராசி

வெற்றிமேல் வெற்றி கிடைக்கும் நாள். அரச உதவி கிடைக்கும். உறவுகள் கூடும் நாள். தனலாபம் கூடும் நாள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிஸ்ட எண் – 9

 

 மீனராசி 

தொட்டது துலங்கும் நாள். பிள்ளைகளின் உதவி கிடைக்கும். பொறுமைக்கு பலன் கிடைக்கும். பெண்கள் உடல் நலனில் கவனம் தேவை.

அதிஸ்ட எண் – 3

RELATED ARTICLES

Most Popular

Recent Comments