Tuesday, January 7, 2025
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeMain NewsTechnologyஐபோன் லுக்கில் புது ரெட்மி போன்!

ஐபோன் லுக்கில் புது ரெட்மி போன்!

சியோமி நிறுவனம் தனது முற்றிலும் புதிய ரெட்மி டர்போ 4 ஸ்மார்ட்போனினை இன்னும் சில நாட்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஜனவரி 2 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ரெட்மி டர்போ 4 டிமென்சிட்டி 8400 அல்ட்ரா சிப்செட் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை கொண்டிருக்கும்.

வெளியீட்டுக்கு முன் புதிய ரெட்மி டர்போ 4 ஸ்மார்ட்போனின் டிசைன் விவரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த ஸ்மார்ட்போன் செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் 50MP கேமரா சென்சார்கள், பின்புறம் சிவப்பு நிற அக்சென்ட்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன் பேக் கவரில் ஃபிராஸ்ட்டெட் மேட் கிளாஸ் கொண்டுள்ளது.

இதன் ஒட்டுமொத்த தோற்றம் ஐபோன் 16 மாடலை நினைவூட்டும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் வலது புறத்தில் வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் உள்ளன.

இத்துடன் கீழ்புறம் ஸ்பீக்கர் இடம்பெற்று இருக்கிறது.

புதிய ரெட்மி டர்போ 4 ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் புளூ என மூன்றுவித நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. சீனாவில் ரெட்மி டர்போ 4 பிரான்டிங்கில் வெளியாகும் நிலையில், சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் போக்கோ X7 ப்ரோ பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments