இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்திற்கு அருகே கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி ஏற்பட்ட பனிச்சரிவில், சுமார் 55 தொழிலாளர்கள் புதையுண்டனர்.
அதனைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் இணைந்து அவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் , 46 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு இராணுவ வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
தொடர்ந்தும் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் காணாமல் போனவர்களின் சடலம் நேற்றும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன .