Monday, February 2, 2026
HomeGossipsயார் என்ன நினைத்தாலும் எனக்கு அதில் தான் சந்தோசமே : சமந்தா open talk..!

யார் என்ன நினைத்தாலும் எனக்கு அதில் தான் சந்தோசமே : சமந்தா open talk..!

நடிகை சமந்தா வெற்றியை சுதந்திரத்தின் அடிப்படையில் பார்க்கிறேன் என சமீபத்தில் ஒரு தனியார் யூடியூப் சேனல் அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ள சில முக்கிய விடயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் சிட்டாடல் எனும் வெப் தொடர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து ரக்ட் பிரம்மாண்டம் என்ற வெப் தொடரில் நடிக்க உள்ளார். இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்குகிறார்கள். நடிப்பை தொடர்ந்து தற்போது சொந்தமாக தயாரிப்பில் இறங்கி உள்ளார்.

அந்த வகையில், சுபம் என்ற படத்தை தயாரித்தார். நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைரும் அறிந்ததே. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நான்கே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார்கள்.

கடந்த ஆண்டு சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் திருமணம் நடைபெற்றது.

ஆனால் சமந்தா எதையும் பொருட்படுத்தாமல் தன்னை தானே மீட்டுக்கொண்டு கடினமான சூழ்நிலைகளையும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் கடந்து வருகின்றார்.

அண்மை காலமாக சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருவுடன் ச மூக ஊடகங்களில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமந்தா சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.குறித்த பேட்டியில் அவர், “நான் இப்போது வெற்றியை சுதந்திரத்தின் அடிப்படையில் பார்க்கிறேன்.

இரண்டு வருடங்களாக எனது திரைப்படம் எதுவும் வெளியாகவில்லை. வளர்ச்சி அடைவதும், முதிர்ச்சி அடைவதும்தான் சுதந்திரம். முக்கியமாக ஒரு பெட்டிக்குள் அடைபடாமல் இருப்பதே சுதந்திரம் என்பது இப்போது எனக்கு புரிந்திருக்கிறது. நான் முன்புபோல் இப்போது வெற்றி பெறவில்லை என்று என்னை சுற்றி இருப்பவர்கள் நினைக்கலாம்.

ஆனால் யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை நான் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போதுதான் அதிக வெற்றி பெற்றிருப்பதாக நினைக்கிறேன்.

ஒவ்வொரு நாள் காலையிலும் நான் எழுந்திருக்கும்போது உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன். ஏனென்றால் நன் செய்யும் பல வேலைகள் எனக்கு நிம்மதியை தருகின்றன” என குறிப்பிட்டுள்ளார்.குறித்த பேட்டி ரசிகர்களிடையே பயங்கரமாக ட்ரெண்டாகி வருகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular