Monday, February 2, 2026
HomeMain Newsதென்னாபிரிக்காவில் துப்பாக்கிச்சூடு – எழுவர் உயிரிழப்பு

தென்னாபிரிக்காவில் துப்பாக்கிச்சூடு – எழுவர் உயிரிழப்பு

தென்னாபிரிக்காவின் மாரிக்கானாவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 07 பேர் உயிரிழந்துள்ளதோடு மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கி முனையில் பணம் பறிக்க முயன்ற நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல்தாரிகளை பொலிஸார் தேடி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தாக்குதலில் ஒரு பெண் மற்றும் 30 முதல் 50 வயதுடைய ஆறு ஆண்கள் கொல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular