அமெரிக்காவும் ஈரானும் அறிவித்த இரண்டு வாரகால போர் நிறுத்தத்தை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸ் வரவேற்றுள்ளார்;.
மத்திய கிழக்கில் மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டத்தின் கீழ் தங்களுக்குள்ள கடமைகளுக்கு இணங்கவும் போர் நிறுத்தத்தின் விதிமுறைகளுக்குக் கட்டுப்படவும் குட்டெரஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
தொடர்ந்து நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும் துன்பங்களைத் தணிப்பதற்கும் போர் நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவது மிகவும் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை எளிதாக்கிய பாகிஸ்தான் மற்றும் மத்தியஸ்தம் வகிக்கும் பிற நாடுகளின் முயற்சிகளுக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
