மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை பகுதியில் மின்சாரம் தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காக மின்சார மோட்டரை பொருத்த முயன்றபோது மின் தாக்கியதிலேயே அவர் உயிரிழந்தார் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கச்சக்கொடி சுவாமிமலை கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை வீரசிங்கம் (வயது 58) என்பவரே உயிரிந்தவராவார்.
சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
