யாழ். குடாநாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக வீதிகளில் பயணிக்கும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாகஇ வீதி சமிக்ஞை விளக்குகளில் சிவப்பு விளக்கு எரியும் போதுஇ சுட்டெரிக்கும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைக் கருத்திற் கொண்டுஇ மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளில் பயணிப்போருக்கு நிழல் தரும் வகையில், வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு மேலாக சாக்கு படங்குகள் கட்டப்பட்டுள்ளன.
நல்லூர் பிரதேச சபையின் முயற்சியினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட திருநெல்வேலி சந்தைப் பகுதியில் உள்ள வீதி சமிக்ஞை விளக்குகளில் இவ்வாறான சாக்கு படங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
வீதியில் காத்திருக்கும் வாகன சாரதிகள் வெயிலின் தாக்கத்திலிருந்து ஓரளவு விடுபட இந்த முயற்சி பெரிதும் உதவியாக இருப்பதாகப் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கோடை கால வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், ஏனைய முக்கிய சந்திகளிலும் இவ்வாறான நிழல் தரும் கட்டமைப்புகளை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
