சர்வதேச விருது வென்ற ஈழத் தமிழர்!

உலகின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரிகளுள் ஒருவராக ஈழத் தமிழரான சிறீ இராசமாணிக்கம் விருது வென்றுள்ளார். தற்போது சுவிற்சர்லாந்தில் வசிக்கும் யாழ்ப்பாணம் – புங்குடுதீவை சேர்ந்தவராவார்.

சுவிற்சர்லாந்தின் தலைநகர் மட்ரிட்டில் நடைபெற்ற பெஸ்ட் சி.இ.ஓ. அவார்ட்ஸ் – 2026 (Best CEO Awards – 2026)விருது விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட்டது.

இந்த உயரிய விருதுக்காக 70இற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஆயிரத்து 89 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். இதில், பல துறைகளிலிருந்தும் 70 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.

தொழில்துறை முன்னேற்றம், புதுமை, மாற்றுத் தலைமையியல் மற்றும் உலகளாவிய தாக்கம் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டமைக்காக சிறீ இராசமாணிக்கத்துக்கு விருது வழங்கப்பட்டது.

பெஸ்ட் அவார்ட்ஸ் இன்ரர்நஷனல் யு. எஸ். ஏ. அமைப்பு வழங்கிய இந்த விருது, உலக வணிக மற்றும் தொழில்முனைவு துறைகளில் மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles