வாளிக்குள் மூழ்கி 11 மாதப் பெண்குழந்தை மரணம்; பாட்டி கைது

மலேசியாவின் நெகிரி செம்பிலான், சிரம்பானில் நேற்று தண்ணீர் நிரம்பிய வாளியில் உயிரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 11 மாத பெண் குழந்தை தொடர்பில் 54 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சிரம்பான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இரவு 7.22 மணிக்கு இதுகுறித்து முறைப்பாடு அளிக்கப்பட்டதாகக் கூறினார்.

குழந்தையின் பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்தபோது, ​​காலை 9 மணி முதல் அக்குழந்தை அதன் பாட்டியின் பராமரிப்பில் இருந்துள்ளது.

சுமார் மதியம் 2.30 மணியளவில், பாட்டி சமைத்துக் கொண்டும் துணிகளை உலர்த்திக் கொண்டும் இருந்தபோது, ​​குழந்தை தொட்டிலில் தூங்க விடப்பட்டது.

அதற்குப் பிறகு சிறிது நேரத்தில், குழந்தை தொட்டிலில் இல்லை என்பதை பாட்டி உணர்ந்தார். தேடுதலுக்குப் பிறகு, வீட்டின் பின்புறத்தில் சவர்க்கார நீர் இருந்த ஒரு வாளியில் குழந்தை முகம் குப்புறக் கிடப்பதைக் கண்டதாக அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

குழந்தை அருகிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்னர் சிரம்பானில் உள்ள துவாங்கு ஜாஃபர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் யதிம் கூறினார். மாலை 4.30 மணிக்கு ஒரு மருத்துவ அதிகாரியால் குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இன்று அதிகாலை 1 மணிக்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. ஆய்வக அறிக்கை வரும் வரை மரணத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளதுஎன்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles