ஈரான் போரில் சீனாவின் நிழல்? அமெரிக்கா அதிர்ச்சி!
ஈரானின் இராணுவ திறனை மேம்படுத்த சீனா மறைமுகமாக உதவியிருக்கலாம் என்ற புதிய தகவல்கள் சர்வதேச முக்கியத்துவத்தை பெற்றுள்ளன.
ஈரானுடன் போர் நீடித்தபோது அமெரிக்காவின் எவ்-15 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில், சீனாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை அல்லது கண்காணிப்பு அமைப்புகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
மேலும், அமெரிக்க இராணுவ நிலைகள் மற்றும் விமானங்களின் நகர்வுகளை கண்காணிக்க சீன செயற்கைக்கோள் மற்றும் நுண்ணறிவு தொழில்நுட்பங்களை ஈரான் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.
இதனிடையே, தாய்வான் விவகாரத்தை மையமாகக் கொண்டு சீனா – அமெரிக்கா இடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது.
எனினும், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் சீனா இதுவரை எந்தத் தெளிவான ஒப்புதலையும் வழங்கவில்லை. பல தகவல்கள் இன்னும் விசாரணை நிலையிலேயே உள்ளன என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
