2026 உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியில் ஈழத்தமிழ் வம்சாவளியைச் நிஷான் வேலுப்பிள்ளை தெரிவாகியுள்ளார்.
இதன்மூலம் உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரில் போட்டியிடத் தகுதி பெற்ற முதல் தமிழ் வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.
அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் டோனி போபோவிக் அறிவித்த 26 பேர் கொண்ட இறுதிப் பட்டியலில் நிஷான் வேலுப்பிள்ளையின் பெயர் இடம்பெற்றுள்ளது.
மெல்பர்னில் பிறந்து வளர்ந்த நிஷான், தற்போது மெல்பர்ன் விக்ரோறி அணிக்காக விளையாடி வருகிறார். அவரின் தந்தை சசிநாத் வேலுப்பிள்ளை ஈழத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்.
2024ஆம் ஆண்டு சீனாவுக்கு எதிரான உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டியில் சர்வதேச அறிமுகம் பெற்ற நிஷான், களமிறங்கிய ஏழு நிமிடங்களுக்குள் கோல் அடித்து அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இதுவரை ஏழு சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், மூன்று கோல்களைப் பதிவு செய்துள்ளார். அவை அனைத்தும் உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகளில் அடிக்கப்பட்டவையாகும்.
பிபாவால் அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கான போட்டிகளில் தமிழீழ அணி பங்கேற்று வந்திருந்தார். நிஷான் வேலுப்பிள்ளையின் இந்தச் சாதனை உலகத் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த வரலாற்றுத் தருணமாக பார்க்கப்படுகிறது.
