கணவரை முதுகில் சுமந்து முதல்வரை சந்தித்த பெண்!

மாற்றுத்திறனாளியான தனது கணவரை முதுகில் சுமந்தபடி வந்த பெண் ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்தியாவின் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில்,

மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி பங்கேற்ற நிகழ்வில்இ சுந்தர்பன்ஸ் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது பிரச்சினைகளை நேரடியாக முன்வைத்தனர்.

முதல்வரை நேரில் சந்தித்த தம்பதியினர், மின்சார வாகனம், சொந்த வீடு மற்றும் அரசின் நிதியுதவி திட்டப் பயன்களை வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.

தங்களின் கோரிக்கைகளை கேட்ட முதல்வர், பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒரு வாரத்துக்குள் உரிய உதவிகள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்ததாக அவர் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளி கணவரை முதுகில் சுமந்தபடி மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வந்த மனைவியின் செயல், அங்கு கூடியிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்ததுடன், சமூக ஊடகங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles