களுத்துறை முதியோர் இல்லத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், அந்த முதியோர் இல்லத்தை நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரணை அங்குருவாதொட்டை -படகொடை பகுதியில் முதியோர் இல்லத்தில் நேற்று முன்தினம் மாலை தீ விபத்து இடம்பெற்றது.
இந்தத் தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயங்களுக்கு உள்ளாகினர். இதேநேரம், அங்கிருந்த மூவர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி நடக்கிறது.
இந்த நிலையிலேயே இன்று வியாழக்கிழமை முதியோர் இல்லத்தை நடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
தீ விபத்து நடந்த சமயத்தில் அந்த இல்லத்தில் 72 முதியவர்கள் இருந்தனர் என்று கூறப்படுகிறது.
