தொடங்கியது ‘எல் நினோ’ காலநிலை – பசுபிக் கடலில் கடும் வெப்பம்

உலகையே மிரட்டிக் கொண்டிருக்கும் எல் நினோ காலநிலை தொடங்கிவிட்டதாக ஐரோப்பிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பசுபிக் கடல் மேற்பரப்பில் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதே எல் நினோ எனப்படுகிறது. அதன்படி, கடந்த மே மாதத் தொடக்கத்தில், பசுபிக் கடல் நீரின் மேற்பரப்பு வெப்பம் மோசமான அளவான 0.5 சென்டிகிரேட் என்பதைத் தொட்டது. இதனால் எல் நினோ உருவானதாக அறிவிக்கப்பட்டது.

பல்வேறு வானிலை ஆய்வு மையங்களும் இந்த வெப்ப அளவானது மே மாத இறுதிக்குள் மேலும் அதிகரிக்கும் என்று எச்சரித்திருந்தன.

மே 24ஆம் திகதி நிலவரப்படி, இந்த வெப்பநிலை 0.67 சென்டிகிரேட் என்று ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இன்று உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் தகவலாக எல் நினோ விளைவு தொடங்கியிருப்பது குறித்த ஐரோப்பிய வானிலை மையம் குறுகிய கால வானிலை முன்னறிவிப்பினை வெளியிட்டது. இன்றைய பசுபிக் கடலின் நீர்மேல் பரப்பின் வெப்பம் அதிகரித்திருப்பது, எல் நினோ காலநிலை தொடங்கிவிட்டதற்கான அறிகுறி என ஐரோப்பிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles