ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பர்க் மீது உக்ரைன் பெரும் டிரோன் தாக்குதல்!

ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பர்க் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மீது உக்ரைன் இராணுவம் கடுமையான டிரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு முறையான பதிலடியாகவே, தங்களது படைகள் ரஷ்யாவின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடற்படைத் தளம் மீது இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக நேரடிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த உக்ரைன் ஜனாதிபதியை சந்திப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்து, ஒரு நாள் கடந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதேவேளை ரஷ்ய வான் பாதுகாப்புப் படையினர் , உக்ரைனின் 376 டிரோன்களை இடைமறித்து அழித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சென் பீட்டர்ஸ்பர்க் நகரைச் சூழ்ந்துள்ள பிராந்தியத்தில் மாத்திரம் 140 இற்கும் மேற்பட்ட டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அப்பிராந்திய ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இத்தாக்குதல்களின் போது Ust-Labinsk நகரில் உள்ள எண்ணெய் கிடங்கு ஒன்றின் மீது டிரோன் மோதியதில் அங்கு பெரும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தங்களது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பைக் கருதி வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles