பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 32 பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸில் இன்று (08) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர்.

மேலும், இந்த அனர்த்தத்தில் 114 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜேர்மனிய புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் அண்டை நாடான இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் இந்தோனேசியாவுக்கான எச்சரிக்கை நீக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles