பிரித்தானியாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலகினார்

பிரித்தானியாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஜோன் ஹீலி இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அதிகரித்த அச்சுறுத்தல் நிலவும் இக்காலத்தில் நாட்டைப் பாதுகாக்கத் தேவையான வளங்களை ஒதுக்கத் தவறியமைக்காக பிரதமர் ஸ்டாமரை விமர்சித்துள்ளார்.

பிரித்தானிய மக்கள் மத்தியில் ஸ்டாமரின் மதிப்பு மற்றும் நம்பிக்கை சரிந்துள்ள நிலையில், ஜோன் ஹீலியின் இராஜினாமா அரசாங்கத்திற்கு கூடுதல் இழப்பாக அமைந்துள்ளது.

மேலும், செலவழிக்கப் பணம் இல்லாதபோது பாதுகாப்புச் செலவினங்களை எவ்வாறு அதிகரிக்க முடியும் என்ற அரசாங்கத்தின் மையத்திலிருக்கும் நெருக்கடியையும் இது அம்பலப்படுத்துகிறது.

இராணுவச் செலவினங்களை விரிவுபடுத்துவதற்கான அதிகரித்து வரும் கோரிக்கைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்து பிரிட்டனின் பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சகங்கள் பல மாதங்களாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.

இதனால் பாதுகாப்பு முதலீட்டு திட்டத்தை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles