ஆயத்துல்லா கமேனியின் மாபெரும் இறுதி ஊர்வலத்துக்கு தயாராகும் ஈரான்!

ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் ஜூலை 4 முதல் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் அறிவித்துள்ளன.

தெஹ்ரான், கோம் மற்றும் மஷ்ஹாத் நகரங்களில் பல கட்டங்களாக இந்த நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.

ஜூலை 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் பொதுமக்கள் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன், ஜூலை 6 அன்று தெஹ்ரானில் பிரம்மாண்ட இறுதி ஊர்வலம் நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஜூலை 7 அன்று கோம் நகரிலும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இறுதியாக, ஜூலை 9 ஆம் திகதி கமேனியின் சொந்த ஊரான மஷ்ஹாத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஈரானை வழிநடத்திய கமேனி, கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அவரது மறைவுக்குப் பின்னர், அவரது மகன் முஜ்தபா கமேனி புதிய உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த இறுதிச் சடங்குகள் ஈரானின் சமகால அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles