ஐரோப்பிய நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப நிலை அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக 845 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில்,வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் எளிதில் நீர்ச்சத்துக் குறைபாட்டிற்கு ஆளாவதைத் காணக்கூடிய நிலையில் இருப்பதால், பொது இடங்களில் மது அருந்துதல், பல ரயில்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் என்பவற்றுக்கு பிரான்ஸ் அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
இதேவேளை, வெப்பத்தைத் தணிக்க நீர்நிலைகளில் குளித்தபோது, பிரான்சில் 4 சிறுவர்கள் உள்பட ஐரோப்பாவில் பலர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
முதியவர்கள் மற்றும் பாதைகளில் வசிப்போரை பாதுகாக்க மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பருவநிலை மாற்றமே இந்த அதீத வெப்பத்திற்குக் காரணம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
மேலும், பிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ள நிலையில், நாட்டின் 3இல் ஒரு பகுதிக்கு ‘ரெட் அலேட்’ விடுக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
