மலேசியாவின் காஜாங்கிலுள்ள தாமான் இம்பியான் இண்டா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடி வீடு ஒன்றிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசிய நிலையில் சூட்கேஸ் ஒன்றிற்குள் அடைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று மாலை 7 மணியளவில், அந்த வீட்டின் அருகே கடுமையான துர்நாற்றம் வீசியதைத் தாங்க முடியாத அப்பகுதி குடியிருப்பாளர்கள் உடனடியாகக் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் சந்தேகத்திற்குரிய அந்த வீட்டிற்குள் சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்த ஒரு பெரிய பயணப் பெட்டிக்குள் (சூட்கேஸ்) பெண் ஒருவரின் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிர்ச்சியுடன் கண்டறிந்தனர்.
பலியான பெண் யார், அவர் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் மற்றும் இக்கொடூரச் செயலின் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிவு, செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
