ஈரான் வான்வெளி முழுமையாக மூடப்பட்டது

ஈரானின் வான்வெளி இன்று(6) முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த உச்சத் தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தலைநகரில் பொது நிகழ்ச்சிகள் நடைபெறுவதால், தெஹ்ரானின் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் மற்றும் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்தில் வழக்கமான விமானப் பயணங்கள் இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மெஹ்ராபாத் விமான நிலையம் நாளைய தினம் இயல்பு நிலைக்குத் திரும்பும் அதே நேரத்தில் இமாம் கொமேனி விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூலை 9 ஆம் திகதி வடகிழக்கு நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) வான்வெளியும், ஷாஹித் ஹஷேமிநெஜாத் சர்வதேச விமான நிலையத்தின் (hahid Hasheminejad International Airport) செயல்பாடுகளும் முழுமையாக இடைநிறுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles