பிரித்தானியாவில் காட்டுத் தீ அபாயம் : குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

பிரித்தானியாவின் சில பகுதிகளில் குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காட்டுத்தீ பரவ ஆரம்பித்துள்ளது.

வேல்ஸின் வடக்கு பகுதியில் நேற்று காட்டுத் தீ பரவியுள்ளது. இதன் காரணமாக, அப்பகுதியில் இருந்த சுமார் 60 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் பிரித்தானியாவில் தொடரும் வெப்பநிலை காட்டுத்தீ அபாயத்தை கணிசமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெரும்பாலான காட்டுத்தீக்கள், மனிதர்களின் ஒழுக்கமற்ற நடத்தையின் காரணமாக ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆகவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே டெர்பிஷையரில் (Derbyshire), ஏற்பட்ட சிறிய அளவிலான தீ காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles