வைரலாகியுள்ள மலேசிய ‘லாமின் யமால்’: ஸ்பெயின் கால்பந்து வீரர் போல் இருக்கும் இளைஞரைக் காணத் திரளும் மக்கள்

அண்மையில் நிறைவடைந்த 2026 உலகக் கிண்ணக் கால்பந்துத் தொடரில் உலகப்புகழ் பெற்ற ஸ்பெயின் அணியின் 19 வயது இளம் நட்சத்திர ஆட்டக்காரர் லாமின் யமால் போல அச்சு அசலாகத் தோற்றமளிக்கும் மலேசிய இளைஞர் ஒருவர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.

அந்த உள்ளூர் இளைஞரைக் கண்டதும், பொது மக்கள் ஆர்வத்துடன் அவருடன் புகைப்படங்கள் மற்றும் ‘செல்ஃபி’ எடுக்க ஆர்வம் காட்டிய புகைப்படங்கள் இணையத்தில் தீயாகப் பரவி வருகின்றன.

அச்சம்பவம் உள்ளூர் செய்தி ஊடகங்கள் மற்றும் வானொலி நிலையங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, இன்று Fly FM ஆங்கில வானொலி நிலையம் அந்த மலேசிய ‘லாமின் யமாலை’த் தனது நேரலை நிகழ்ச்சிக்கு அழைத்துப் பிரத்யேக நேர்காணல் செய்துள்ளது.

அந்நிகழ்வில் ஸ்பெயின் ஜெர்ஸி அணிந்து, உலகக் கிண்ண மாதிரியைக் கையில் ஏந்தியவாறு அந்த இளைஞர் தோன்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

மலேசியக் கால்பந்து இரசிகர்கள் பலரும் இந்த இளைஞரின் முக அமைப்பு நிஜ லாமின் யமாலைப் போலவே இருப்பதாக இணையத்தில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles