படகு விபத்தில் காணாமல்போன ரொறன்ரோ தம்பதியரின் உடல்கள் மீட்பு!

கனடாவின் முஸ்கோக்கா பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தொன்றில் காணாமல் போயிருந்த தம்பதியர் இருவரின் உடல்களையும் புலனாய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் ரொறன்ரோவைச் சேர்ந்த 32 வயது ஆண் மற்றும் 30 வயது பெண் என பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை இரவு 10:40 மணியளவில், பேக்கன்ரிக் பே பகுதிக்கு அருகிலுள்ள ரொசோ ஏரியில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்தபோது, பலத்த சேதமடைந்த நிலையிலிருந்த படகு ஒன்று பாறை விளிம்பில் ஆபத்தான முறையில் சமநிலை இழந்து நின்றதை அவதானித்துள்ளனர்.

விபத்து நடந்த இடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையை முன்னெடுத்தனர்.

சனிக்கிழமை பிற்பகலில் காணாமல் போன இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன.

இச்சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாகத் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles