வோஷிங்டனின் ஸ்போகேன் நகரின் புறநகர்ப் பகுதிகளில் மூன்றாவது நாளாக காட்டுத்தீ எரிந்து வருகிறது.
இதன்காரணமாக குறைந்தது 700 கட்டடங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா முழுவதும் மூன்று பெரும் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஐடஹோ (Idaho) எல்லைக்கு அருகிலுள்ள ராக்கி மலை அடிவாரத்திற்கு மேற்கே பரவ ஆரம்பித்த காட்டுத்தீ பின்னர் புறநகரங்களுக்கும் பரவி பாரிய தீவிபத்தாக உருவெடுத்துள்ளது.
தீவிபத்தினால் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ பரவலுக்கான காரணத்தை அறிய விசாரணைகள் தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
