ஏலத்துக்கு வருகிறது இளவரசி டயானாவின் ‘Revenge Dress’

பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானா அணிந்திருந்த, அரச குடும்ப வரலாற்றில் மிகவும் பிரபலமான ஆடைகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘Revenge Dress’ என அழைக்கப்படும் கறுப்பு நிற ஆடை ஏலத்திற்கு வரவுள்ளது.

1994ஆம் ஆண்டு, அப்போதைய இளவரசர் சார்லஸ் தன்னுடைய திருமணத்திற்கு வெளியான உறவை ஒப்புக்கொண்ட தொலைக்காட்சி நேர்காணல் ஒளிபரப்பான அதே இரவில், டயானா இந்த கருப்பு நிற “Christina Stambolian” ஆடையை அணிந்து பொது நிகழ்வில் கலந்துகொண்டார்.

இதன் காரணமாக இந்த ஆடை பின்னர் ‘Revenge Dress’ எனப் பிரபலமானது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள Sotheby’s ஏல நிறுவனத்தில் எதிர்வரும் டிசசெம்பர் மாதம் இந்த ஆடை ஏலத்திற்கு விடப்படவுள்ளது.

இந்த ஆடை 150,000 முதல் 300,000 அமெரிக்க டொலர் வரை விலைக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles