பழிவாங்கும் நடவடிக்கைளில் ரஷ்யா தீவிரம் – 400 பக்க அறிக்கை ஐ.நாவில் சமர்ப்பிப்பு

உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, வெளிநாடுகளில் உள்ள விமர்சகர்களுக்கு எதிரான கண்காணிப்பு, மிரட்டல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளதாக ஐ.நா நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொலை முயற்சிகள், தாக்குதல்கள் மற்றும் விஷம் கொடுத்தல் போன்ற செயல்கள் மூலம் “எல்லை தாண்டிய ஒடுக்குமுறையை” (transnational repression) மிக அதிக அளவில் மேற்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக ரஷ்யா மாறியுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

ரஷ்யாவிற்கான மனித உரிமைகள் விவகார சிறப்புப் பிரதிநிதி ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் கவுன்சிலிடம் நேற்று இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை இது தொடர்பில் 400 ஆவணப்படுத்தப்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் அறிக்கையொன்றும் தயாரிக்கப்பட்டு ஜெனீவா மனித உரிமை கவுன்சிலிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு முதல் சுமார் 650,000 முதல் 900,000 பேர் ரஷ்யாவை விட்டு வெளியேறியுள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடுகடந்த அடக்குமுறை” சம்பவங்கள் 2014-2021 காலகட்டத்தில் 29 ஆக இருந்த நிலையில், 2022-2024 இற்கு இடையில் 89 ஆக மும்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாடுகளில் உள்ள குடிமக்களுக்கான சேவைகள் மற்றும் பயண ஆவணங்களையும் ரஷ்ய அதிகாரிகள் கட்டுப்படுத்தியுள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles