இங்கிலாந்து திருச்சபை பேராயர் ஸ்டீபன் கொன்வே பணியிடைநீக்கம்

லிங்கன் ஆயர் ஸ்டீபன் கொன்வே Stephen Conway மதப்பணிகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து திருச்சபை நேற்று இதனை அறிவித்துள்ளது.

2018 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு நபர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் மேலவையான ‘ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்’ (House of Lords) உறுப்பினரான கொன்வே, 2023இல் லிங்கன் ஆயராகப் பொறுப்பேற்றார்.

பாலியல் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்களில் ஈடுபட்ட ஜோன் ஸ்மித் (John Smyth) விவகாரத்தை இங்கிலாந்து திருச்சபை கையாண்ட விதம் குறித்து நடத்தப்பட்ட சுயாதீன ஆய்வில் ஸ்டீபன் கொன்வே Stephen Conway மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

ஸ்மித் விவகாரம் தொடர்பான ஆய்வின் விளைவாகப் பாதுகாப்பு நடைமுறைகளில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து திருச்சபை தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் சூழலில் இவரது பதவி விலகல் நிகழ்ந்துள்ளது.

இந்த விவகாரம் 2024இல் அப்போதைய கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி (Justin Welby) பதவி விலகுவதற்கும் வழிவகுத்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles