அனோஜனுக்கு விடுதலை வேண்டி யாழில் மெழுகுதிரி ஏந்தி கவனவீர்ப்புப் போராட்டம்!  

Group of people standing in a line at dusk, holding posters and lit candles in a vigil or protest outdoor event.


சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அம்பாறையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பையும் விடுதலையையும் கோரி, யாழ்ப்பாணம் – பண்ணைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மெழுகுதிரி ஏந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தன்னார்வ இளைஞர்களின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்தக் கவனவீர்ப்புப் போராட்டத்தில் மதத் தலைவர்கள், சிவில் சமூக மற்றும் அரசியல் பிரதிநிதிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தும் பதாகைகள் ஏந்தப்பட்டதுடன், மெழுகுவர்த்திகளை ஏற்றி மாலை வேளையில் இந்தக் கண்டன மற்றும் கவனவீர்ப்புப் போராட்டம் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles