இந்தியப் பெருங்கடல் வரை போர் விரிவாகும் – ஈரான் எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீண்டும் தாக்கினால் போர் இந்தியப் பெருங்கடல் வரையிலும் விரிவாக்கப்படும் என ஈரானிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் தலைமை மதகுரு மொஜ்தபா கமேனியின் ஆலோசகரான மேஜர்-ஜெனரல் யஹியா ரஹிம் சஃபாவி, ஈரானுக்கு ஆதரவாக யேமனின் ஹவுதி படைகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைக் குறிபிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீண்டும் ஈரானின் மீது தாக்குதல் மேற்கொண்டால் நடைபெற்று வரும் போரானது இந்தியப் பெருங்கடல் வரையிலும் விரிவாகக் கூடும் என அவர் கூறியுள்ளார்.

இதுபற்றி, அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: “ஏற்கனவே, இந்த மோதலானது பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் இருந்து செங்கடல் வரையிலும் பரவியுள்ளதால், போருக்குப் பதிலடியாக இந்தியப் பெருங்கடல் வரையிலும் அதற்கு மேலும் விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் மீண்டும் தாக்குதல் நடத்தினால் அதற்குப் பதிலடி கொடுக்க ஈரானிய ராணுவம் திட்டங்களைத் தயார்நிலையில் வைத்துள்ளது. 100 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கள் பகுதியைப் பாதுகாக்க ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து யேமன் மக்கள் உறுதியாக நிற்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் சவூதி அரேபியாவுக்கு எதிரான யேமனின் ஹவுதிகள் பல்வேறு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், யேமனில் சவூதியின் ஆதரவுபெற்ற அரசுப்படைகளுக்கும் ஹவுதிகளுக்கும் இடையே உள்நாட்டு மோதல் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles